Thursday, 20 December 2012

அது ஒரு அழகிய தருணம் ..:-)









உன்னோடு நான்  வாழ்ந்த காலங்களும்,
உன் நினைவோடு நடக்கின்ற தருணங்களும்  
என்றும் இனியவையே !

உன் விழி திறக்கும் நேரத்திற்காக   
என்னிமை  அசையாமல்  காத்திருந்த  
காலை  நேரங்கள் ,

தொலைபேசியில் ஒலித்த புதிய அழைப்புகளின்   
குரல்கள் எல்லாம் உன் குரலோ என எண்ணிப் 
புன்னகித்த நிமிடங்கள்,

உன் முகம் வாடும் தருணங்களில்   
என் விழிச்சாரல் கொண்டு உன்னைத்  
தேற்றிய தினங்கள் ,

உன் விழித்தூரல் கண்டு 
 நான்  சருகென  
வாடிய பொழுதுகள், 

உன் வெற்றி கண்டு 
நான் தாவி
குதித்த தினங்கள்,

என் வாழ்வின் பாரங்களை 
உன் மனதோடு இறக்கி 
வைத்த மணித்துளிகள்,

துவண்டு போன 
காலங்களில் நீ 
தோள்கொடுத்த தருணங்கள்,

அன்று முதல் இன்று வரை உன் 
நினைவுகளோடு பயணிக்கும் காலங்கள் யாவும் 
அழகிய தருணங்களே!!