இவளது பிறை நெற்றி பார்த்து
சூரியனும் சிறிய பொட்டாய் மாற ஆசை கொண்டதோ!
இவளின் விழி மீன் ஒளிர்ந்ததைக் கண்டு
விண்மீன்களும் தோற்றனவோ!
பெண்ணிவளின் மெல்லிதழ் விரிந்ததில்
மலர்களும் மயங்கியதோ!
இவள் நடை பயில்கையில்தான்
உரைநடையும் தோன்றியதோ!
இவளின் நாணம் கொண்டுதான்
பண்பாடும் பறைசாற்றப்பட்டதோ!
nice one da:)
ReplyDelete