Friday, 18 January 2013

நானும் என் காதலும்



பாலை வனத்தில் விதைத்து வளர்த்தேன்
என் காதல் வித்துக்களை ..
கானல் நீரில் வேர்கள் நனையும் என்றேதான்
நானும் கனவுடன் அவனது நினைவுடன் காத்துக் கிடந்தேன்..
அவன் போன பாதை பின்பற்ற மணற்துகள்களின்
கால்தடங்களை என் விழி பிம்பமாக பதித்து வைத்தேன் ..
இது என்ன போர்க்களமா !
விருப்பங்கள் எல்லாம் பகைவர்களாகி என் மனதோடு வதாடுதே ..
நான் வெறுக்கவும் இல்லை அவனை மறக்கவும் இல்லை,
என் இரவுகளில் எல்லாம் அவனது கனவுகளின் தொல்லை..
வாழ நினைக்கும் ஒவ்வொரு கணமும்
அவனது நினைவுகளோடுதான் எனது பயணங்கள்..
காட்டுதீ போல் பரவுகிறது என் மனதில் அவனது நினைவு
மழை வந்தும் வாடிய பயிராய் நான்
நீரூற்ற அவன் வருவான் என்ற எதிர்பார்ப்பில்....

இறைவா!




பாடல்கள் தந்தாய் இறைவா!
உன் பாதங்கள் போற்றிப்  பணிகின்றேன் இறைவா!
காண்பதெல்லாம் உன் படைப்பே இறைவா!
நான் காணத் துடிப்பதும் உனையன்றோ இறைவா!
உன்னை தஞ்சம் என்று வந்தேன் இறைவா!
நீ எந்தன் சொந்தம் என்று நின்றதென்ன  இறைவா!
நாட்டிய அரசனும் நீயே இறைவா!
நீ ஆட அரங்கமைத்தேன் என் மனதில் இறைவா!
சிந்தையில் வைத்துன்னை துதித்தேன் இறைவா!
சித்தமெல்லாம் சிவமயமாய் ஆனதென்ன இறைவா!

Wednesday, 16 January 2013

ப்ரியமானவள்


இவளது  பிறை நெற்றி பார்த்து
சூரியனும் சிறிய பொட்டாய் மாற ஆசை கொண்டதோ!
இவளின்  விழி மீன் ஒளிர்ந்ததைக் கண்டு
விண்மீன்களும் தோற்றனவோ!
பெண்ணிவளின் மெல்லிதழ் விரிந்ததில்
மலர்களும் மயங்கியதோ!
இவள் நடை பயில்கையில்தான்
உரைநடையும் தோன்றியதோ!
இவளின் நாணம் கொண்டுதான்
பண்பாடும்  பறைசாற்றப்பட்டதோ!